ஊத்தங்கரை:
சிங்காரப்பேட்டை போலீசார் கீழ்மத்தூர் ஏரி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய கோவிந்தாபுரம் முத்து (வயது 30), குட்டையனூர் குப்பன் (60), திருப்பத்தூர் மாவட்டம் பேரணாம்பட்டு அண்ணாமலை (37), கேசவன் (37), ஏக்கூர் வரதராஜ் (38), ஊத்தங்கரை எம்.ஜி.ஆர். நகர் ராஜேஷ் (32) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2,500 மற்றும் 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.