பெரியகுளத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

பெரியகுளத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.

Update: 2022-08-31 17:06 GMT

விநாயகர் சதுர்த்தியையொட்டி பெரியகுளம் பகுதியில் 56 இடங்களில் இன்று காலை விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, வழிபாடு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மாலை பாம்பாற்று ஆஞ்சநேயர் கோவிலுக்கு அனைத்து சிலைகளும் வாகனங்களில் கொண்டுவரப்பட்டன.

பின்னர் அங்கிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக பெரியகுளம் வராகநதிக்கு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. வழிநெடுக பக்தர்கள் விநாயகரை வழிபட்டனர். முன்னதாக இந்த ஊர்வலத்தை பெரியகுளம் நகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் குழு தலைவர் ஓ.சண்முகசுந்தரம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில், விநாயகர் சதுர்த்தி குழு தலைவர் ராஜபாண்டியன், பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் பாண்டியன், மாவட்ட செயலாளர் உமயராஜ் மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். முடிவில் வராக நதியில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

இந்த ஊர்வலத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்ரே தலைமையில் போலீஸ் துணை சூப்பிரண்டு கீதா மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்