பிரளய காலேஸ்வரர் கோவிலில் கோ பூஜை
பெண்ணாடம் பிரளய காலேஸ்வரர் கோவிலில் கோ பூஜை நடைபெற்றது.;
பெண்ணாடம்
பெண்ணாடத்தில் பிரசித்தி பெற்ற பிரளய காலேஸ்வரர் கோவிலில் வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கோ பூஜை நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் கோ பூஜை நடைபெற்றது.இதையொட்டி கோவிலில் உள்ள பசு மாடுகளுக்கு மஞ்சள், குங்குமம் பூசி சிறப்பு பூஜை செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டு கோமாதாவை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.