அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி அலுவலர்கள்- பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி அலுவலர்கள்- பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-02-01 18:45 GMT

தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கு ஜனவரி மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் ஜனவரி மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு தனியார் கல்லூரி அலுவலர் சங்கம் மற்றும் மூட்டா சார்பில் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வ..உ.சி கல்லூரி மூட்டா கிளை தலைவர் ஜெசிக்கா பெர்னாண்டோ தலைமை தாங்கினார். டான்சாக் பொறுப்பாளர் கந்தசாமி, மூட்டா மூன்றாம் மண்டல செயலாளர் சிவஞானம் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி அலுவலர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கிளை செயலாளர் வெள்ளத்துரை நன்றி கூறினார்.

இதேபோன்று தூத்துக்குடி புனித மரியன்னை மகளிர் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மூட்டா கிளை செயலாளர் செரினா மார்கரட் தலைமை தாங்கினார். தமிழ்நாடு தனியார் கல்லூரி அலுவலர் சங்க கிளை செயலாளர் அந்தோணி உதயகுமார் நிக்சன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்