ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் பேரூராட்சியில் ஒச்சேரி சாலையில் உள்ள ஆதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா நடைபெற்றது. விழாவில் அம்மனுக்கு பால், தயிர், நெய், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு, பனப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள அனைத்து வீதிகளிலும் ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். இதேபோன்று உளியநல்லூர், திருமால்பூர், கீழ்வெண்பாக்கம், நெமிலி உள்ளிட்ட இடங்களிலும் மயான கொள்ளை விழா நடைபெற்றது.