‘இந்தியா’ கூட்டணி ஆட்சியிலேயே என்னை பலமுறை கைது செய்திருக்கிறார்கள் - செல்வப்பெருந்தகை

சைதாப்பேட்டையில் மின்விசிறி கூட இல்லாத அறையில் தன்னை அடைத்து வைத்தார்கள் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.;

Update:2025-11-06 08:36 IST

காஞ்சிபுரம்,

ஸ்ரீபெரும்புதூரில் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் எஸ்.ஐ.ஆர். குறித்த ஆலோசனை கூட்டத்தில் வாக்கு சாவடி முகவர்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது;-

“த.வெ.க. தலைவர் விஜய்க்கு மட்டுமே நெருக்கடி உள்ளது போல் கூறுவதை ஏற்க முடியாது. என்னையும் கூட ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க மறுக்கிறார்கள். ‘இந்தியா’ கூட்டணி ஆட்சியில், நமது ஆட்சியிலேயே பலமுறை என்ன கைது செய்திருக்கிறார்கள். சைதாப்பேட்டையில் மின்விசிறி கூட இல்லாத அறையில் அடைத்து வைத்தார்கள்.”

இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்