சென்னை அண்ணா நகரில் ' ஹாப்பி ஸ்ட்ரிஸ்' நிகழ்ச்சி தொடக்கம்

ஒவ்வொரு சாலையிலும் ஞாயிற்று கிழமைகளில் காலை 6 முதல் 9 மணி வரை சுமார் 800 முதல் 1000 மீட்டர் வரையிலான சாலையில் 5 வாரங்களுக்கு “ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்" நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.;

Update:2022-07-17 16:55 IST

சென்னை,

ஒவ்வொரு சாலையிலும் ஞாயிற்று கிழமைகளில் காலை 6 முதல் 9 மணி வரை சுமார் 800 முதல் 1000 மீட்டர் வரையிலான சாலையில் 5 வாரங்களுக்கு "ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்" நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

இந்த சாலைகளில் 3 மணி நேரத்திற்கு முழுவதுமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு ஹாப்பி ஸ்ட்ரீட்ஸ் - நோக்கங்கள் தொடர்பான நடனம், பாட்டு, இசை நிகழ்ச்சிகள், இலவச சைக்கிள் பயணம், ஸ்கேட்டிங், கயிறு இழுத்தல், கைப்பந்து, பூப்பந்து போன்ற விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி அண்ணா நகரில் நடைபெற்றது.

இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் இணைந்து அண்ணா நகரில் தொடங்கி வைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்