நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சுகாதாரப்பணிகள் திட்ட இயக்குனர் திடீர் ஆய்வு

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சுகாதாரப்பணிகள் திட்ட இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;

Update:2023-07-20 02:17 IST

நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியுடன் இணைந்த கண்டியபேரி ஆஸ்பத்திரி வளாகத்தில் சுமார் ரூ.35 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. கூடுதல் படுக்கை வசதி, பரிசோதனை கூடங்கள், சிகிச்சை அறைகள் உள்ளிட்டவை கட்டப்பட்டு உள்ளன. விரைவில் பணிகள் முடிவடைய உள்ளது.

இந்த நிலையில் அங்கு நடந்து வரும் பணிகளை தமிழக சுகாதாரப்பணிகள் திட்ட இயக்குனர் கோவிந்தராவ் நேற்று திடீரென ஆய்வு செய்தார். பின்னர் அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கேத் லேப், தாய் வார்டு ஆகியவற்றை ஆய்வு செய்து அங்குள்ள வசதிகள் குறித்தும், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்தும் விவரங்கள் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி பாலன், மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்