வீட்டில் தீ விபத்து

வீட்டில் தீ விபத்து

Update: 2022-06-04 21:17 GMT

தக்கலை:

தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம், யாதவர் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது50), கூலி தொழிலாளி. இவரது மனைவி மலர்மதி (34). இவர்களது மகன் சரவண பிரசாந் (15). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குளச்சலில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் மணிகண்டனின் வீட்டில் இருந்து புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் வீடு தீ பிடித்து எரிய தொடங்கியது. இதை கண்ட பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் தக்கலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கூறினர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் வீட்டில் இருந்த கட்டில், பீரோ, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, துணிகள், சமையறை பொருட்கள் என சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. இதுகுறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்