தடையை நீக்காவிட்டால் தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும்

கள்ளுக்கான தடையை நீக்காவிட்டால் தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும் என கரூரில் நல்லசாமி கூறினார்.

Update: 2023-09-17 18:42 GMT

பேட்டி

கரூரில் நேற்று கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகம் காரணமாக கீழ் பவானி பாசனம் நடப்பு ஆண்டில் பாதிப்புக்கு ஆளாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர் தற்போது வெகுவாக குறைந்ததற்கு மழை பொழிவு குறைந்ததுதான் காரணம். இதற்கு நீர்வளத்துறை அமைச்சரும் பொறுப்பு ஏற்க வேண்டும்.தேர்தலுக்கு முன்பு தேவையற்ற இலவசங்களை அறிவித்து அவற்றை நடைமுறை படுத்தி வந்தால் இலங்கைக்கு வந்த நெருக்கடியை விட மோசமான நிலை தான் வரும். 28 மாத கால ஆட்சியில் 8 முறை ஆவின் பால், பால் பொருட்களின் விலையை அரசு உயர்த்தி உள்ளது. இதற்கு நிர்வாகமின்மையே காரணம்.

கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும்

தமிழகத்தில் கள், காவிரிநீர், நீட்ேதர்வு, சனாதனம் பற்றிய புரிதல் இல்லை. புதுச்சேரி, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கள்ளுக்கு தடை இல்லை. தமிழக அரசு கள்ளுக்கு விதித்துள்ள தடையை நீக்கி அறிவிக்க வேண்டும். அதை செய்ய தவறினால் வருகிற 2024 ஜனவரி 21-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும்.2024 நாடாளுமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்பு தமிழக அரசு கள்ளுக்கு விதித்துள்ள தடையை நீக்கி அறிவிக்க வேண்டும். தவறினால் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் தோற்கடிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்