தேனியில்மினி வேன் மோதி டிரான்ஸ்பார்மர் சேதம்:டிரைவர் கைது

தேனியில் மினிவேன் மோதி டிரான்ஸ்பார்மர் சேதமானது. இதில் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-12 18:45 GMT

தேனி அருகே உப்புக்கோட்டையை சேர்ந்த விஜயன் மகன் பிரபு (வயது 29). மினிவேன் டிரைவர். இவர் நேற்று முன்தினம் ஒரு மினி வேனை தேனி விஸ்வநாததாஸ் காலனியில் ஓட்டி சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் மீது மினி வேன் மோதியது. இதில் டிரான்ஸ்பார்மரில் இருந்த ரூ.2¾ லட்சம் மதிப்புள்ள 'சுவிட்ச் பாக்ஸ்' சேதமடைந்தது. இதுகுறித்து மின்வாரிய இளமின்பொறியாளர் திருலோகசந்தர் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் பிரபு மீது போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்