கண்டமனூரில் வெறிநாய் கடித்து குழந்தைகள் உள்பட 13 பேர் படுகாயம்

கண்டமனூரில் வெறிநாய் கடித்து குழந்தைகள் உள்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர்.;

Update:2022-10-08 22:25 IST

கண்டமனூர் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாடவே அச்சம் அடைகின்றனர். இந்நிலையில் இன்று மதியம் கண்டமனூர் மெயின் ரோட்டில் தெரு நாய் ஒன்று வெறி பிடித்தபடி சுற்றித்திரிந்தது. அப்போது அந்த வழியாக சென்ற கண்டமனூரை சேர்ந்த ராஜன்பாபு (வயது 17), அஜிதா (6), அன்ஜய் (12), தியா (5), பிரகாஷ் (9), சுகன்யா (27) உள்ளிட்ட 13 பேரை நாய் கடித்து குதறியது. இதில் படுகாயமடைந்த அவர்கள் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே கண்டமனூர் கிராமத்தில் அதிகரித்து வரும் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்