நாமக்கல் மண்டலத்தில்முட்டை விலை 20 காசுகள் வீழ்ச்சி445 காசுகளாக நிர்ணயம்

Update: 2023-07-19 19:00 GMT

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 465 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை அதிரடியாக 20 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 445 காசுகளாக குறைந்துள்ளது.

கறிக்கோழி கிலோ ரூ.103-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.10 குறைக்க முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.93 ஆக குறைந்துள்ளது. முட்டைக்கோழி கிலோ ரூ.77-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

வடமாநிலங்களில் ஸ்ராவன் பண்டிகை தொடங்கி இருப்பதால், பிற மண்டலங்களில் முட்டை விலை குறைந்து வருகிறது. அதற்கு தகுந்தாற்போல் நாமக்கல் மண்டலத்திலும் முட்டை கொள்முதல் விலை குறைக்கப்பட்டு இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்