போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனா்;

Update:2023-05-11 02:03 IST

ஈரோடு திருநகர் காலனி பகுதியை சேர்ந்தவர் உலகநாதன். இவருடைய மகன் மோகன்ராஜ் (வயது 23). ஆடை வடிவமைப்பாளர். இவர் ஈரோட்டில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலைபார்த்து வருகிறார். இங்கு கரூர் மாவட்டம் விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகள் இந்துப்பிரியாவும் (20) வேலை பார்த்து வந்தார்.

இதனால் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதல் மலர்ந்துள்ளது. இந்துப்பிரியாவும், மோகன்ராஜூம் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் பெற்றேர்களுக்கு தெரியவந்துள்ளது. மேலும் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 8-ந்தேதி வீட்டை விட்டு இந்துப்பிரியாவும், மோகன்ராஜூம் வெளியேறி பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் நேற்று திருமணம் செய்து கொண்டனர். பின்னர் 2 பேரும் பாதுகாப்பு கேட்டு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் இரு தரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்