திருச்செந்தூரில்ஆதிதிராவிடர் பறையர் சமுதாயத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்செந்தூரில் ஆதிதிராவிடர் பறையர் சமுதாயத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update:2023-04-12 00:15 IST

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் பகத்சிங் பஸ்நிலையம் அருகே தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் பறையர் சமுதாய ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, ஒருங்கிணைப்பாளர் முரசு தமிழப்பன் தலைமை தாங்கினார். திருச்செந்தூரில் இருந்து நெல்லை செல்லக்கூடிய சாலையில் உள்ள திருச்செந்தூர் ஆதிதிராவிடர் பறையர் சமுதாய மக்களுக்கு பாத்தியப்பட்ட 79 சென்ட் நிலத்தை உயர் நீதிமன்ற உத்தரவின்படி முழுமையாக ஆதி திராவிடர் பறையர் சமுதாய மக்களிடம் ஒப்படைக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நிலத்தில் தனி நபர்கள் பாதைக்காக ஆக்கிரமிப்பு செய்திருப்பதை கண்டித்தும், திருச்செந்தூர் நகராட்சி டாக்டர் அம்பேத்கர் நினைவு பூங்காவில் டாக்டர் அம்பேத்கர் சிலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில், திருச்செந்தூர் பாராளுமன்ற தொகுதி ஆதிதிராவிடர் நல சங்க தலைவர் கணேசன், தமிழ்நாடு திருக்கோவில் பணியாளர்கள் நல சங்கத்தில் முன்னாள் தலைவர் தோப்பூர் சேகர், உடன்குடி நகர பஞ்சாயத்து கவுன்சிலர் ராணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர்கள் உதயா, வெள்ளதுரை, நகர பொருளாளர் சரண், ஆதிதிராவிடர் பறையர் சமுதாய ஒருங்கிணைப்பு குழுவின் தாலுகா ஒருங்கிணைப்பாளர் வேம்படி முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்