திருச்சி மாவட்டத்தில் 1,820 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்

திருச்சி மாவட்டத்தில் 1,820 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது;

Update:2022-08-07 01:01 IST

தமிழகம் முழுவதும் 33-ம் சுற்று சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் இன்று ஊரக பகுதிகளில் 1,220 இடங்களிலும், மாநகர பகுதிகளில் 600 இடங்களிலும் என மொத்தம் 1,820 இடங்களில் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இது தவிர மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளன.எனவே கொரோனா தடுப்பூசி முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை செலுத்த தவறியவர்கள், முன்னெச்சரிக்கை தவணை செலுத்த தகுதியானவர்கள் அனைவரும் தங்களது ஆதார் அட்டை மற்றும் கைபேசி எண்ணுடன் அருகில் உள்ள முகாமிற்கு சென்று உரிய தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும். இந்த தகவலை கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்