திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் இந்திர திருவிழா
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் இந்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது;
திருவெண்காடு:
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் காசிக்கு இணையான கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவில் நவகிரகங்களில் ஒன்றான புதனின் பரிகார தலமாகவும் விளங்குகிறது. சிவனின் 5 முகங்களில் ஒன்றான அகோரமுகம் அகோர மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார். பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலின் ஆண்டு இந்திர பெருவிழா நேற்றுமுன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் மேளம், தாளம் முழங்கிட கோவில் அர்ச்சகர் ராமநாத சிவாச்சாரியார் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பஞ்ச மூர்த்திகள் வீதிஉலா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன் மற்றும் விழா குழுவினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.