பரமத்திவேலூரில் பகுதி ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் திடீர் ஆய்வு
பரமத்திவேலூரில் பகுதி ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் திடீர் ஆய்வு;
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள உணவகங்கள், வாத்துக்கறி கடைகள் மற்றும் தாபா ஓட்டல்களில் தரமற்ற முறையில் உணவுகள் வழங்கப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் அருண் உத்தரவின்பேரில் பரமத்திவேலூர் உணவு பாதுகாப்பு அலுவலர் சிங்கரவேலு தலைமையிலான குழுவினர் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் தாபாக்கள், சைவ மற்றும் அசைவ உணவகங்கள், வாத்துக்கறி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் உணவகங்களில் வைக்கப்பட்டிருந்த இறைச்சி, சமையல் எண்ணெய் மற்றும் உணவு பொருட்களை ஆய்வு செய்தனர். உணவகங்களில் தரமற்ற பொருட்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதற்கிடையே சுகாதாரமான முறையி உணவு வழங்காத ஓட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.