போகிப் பண்டிகை: 154.17 மெட்ரிக் டன் பயன்பாட்டில் இல்லாத பொருட்கள் பெறப்பட்டு அகற்றம்

சென்னையில் போகிப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களிடமிருந்து 154.17 மெட்ரிக் டன் பயன்பாட்டில் இல்லாத பொருட்களைப் பெற்று அகற்றப்பட்டுள்ளது.;

Update:2026-01-14 20:23 IST

சென்னை,

சென்னை பெருமாநகராட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

போகிப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களிடமிருந்து 154:17 மெட்ரிக் டன் பயன்பாட்டில் இல்லாத பொருட்கள் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களால் பெறப்பட்டு அகற்றப்பட்டுள்ளது.

போகிப் பண்டிகையை முன்னிட்டு, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 12.01.2026 முதல் 14.01.2026 ஆகிய நாட்களில் பொதுமக்கள் தங்களிடையே பயன்பாட்டில் இல்லாத பொருட்களான பழைய துணி. டயர் (Tyre), ரப்பர் ட்யூப் (Rubber Tube), நெகிழி (Plastic). காகிதக் கழிவுகள், அட்டைப் பெட்டிகள் மரக்கழிவுகள் உலோகக் கழிவுகள் மின்னணுக் கழிவுகள் உள்ளிட்டவற்றை எரிப்பதைத் தவிர்த்திடும் வகையில் தூய்மைப் பணியாளர்கள் மூலம் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களில் உள்ள ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 12.01.2026 முதல் 14.01.2026 வரை 154.17 மெட்ரிக் டன் பயன்பாட்டில் இல்லாத பொருட்கள் தூய்மைப் பணியாளர்கள் மூலம் பெறப்பட்டு அகற்றப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

1 திருவொற்றியூர் 25.43 (மெட்ரிக் டன்)

2 மணலி - 11.72

3 மாதவரம் - 24.89

4 தண்டையார் பேட்டை - 1.23

5 இராயபுரம் - 9.60

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்