பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் பகுதியில் 3 கி.மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்கும் பணி, சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதையொட்டி ஆலாம்பாளையத்தில் இருந்து காவிரி பாலம் வரை மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை திட்ட இயக்குனர் ஸ்ரீதர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க அறிவுறுத்தினார். இந்த பணிகளால் வாகனங்கள் செல்வதற்கு சிரமம் இல்லாமல் இருக்கும் எனவும் தெரிவித்தார். ஆய்வின்போது கண்காணிப்பு பொறியாளர் செல்வநாதன், கோட்ட பொறியாளர் சசிகுமார் மற்றும் உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் உடன் இருந்தனர்.