குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தென்காசி வட்டாரத்தில் பெய்த பலத்த மழையால் குற்றால அருவிகளில் இரவு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.;

Update:2026-01-02 07:25 IST

தென்காசி,

தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்றான குற்றாலத்துக்கு உள்ளூர் மட்டுமல்லாது வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர். கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் தண்ணீர் மிதமாக விழுந்து வந்தது. இதில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

இந்த நிலையில், நெல்லை, தென்காசி, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இரவு முழுவதும் தொடர் மழை பெய்தது. தென்காசி வட்டாரத்தில் பெய்த பலத்த மழையால் குற்றால அருவிகளில் இரவு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். காலையில், குற்றாலத்துக்கு குளிக்க வந்திருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள், இந்த அறிவிப்பால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்