கீழ்வீதி ஆதிதிராவிட பள்ளியில் மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் ஆய்வு

கீழ்வீதி ஆதிதிராவிட பள்ளியில் மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.;

Update:2023-04-26 00:03 IST

நெமிலியை அடுத்த கீழ்வீதி கிராமத்தில் அரசு ஆதி திராவிட தொடக்கப்பள்ளி செயல்பட்டுவருகிறது. இப்பள்ளியில் 40-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த 2021-ம் ஆண்டு இப்பள்ளி கட்டிடம் பழுதடைந்துள்ளதாகக் கூறி இடித்து அப்புறப்படுத்தினர். மேலும் ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்னும் கட்டுமான பணிகள் தொடங்கவில்லை.

இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் பள்ளி இயங்கிவருகிறது. இந்த நிலையில் நேற்று மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் பிரேமலதா கட்டிடம் இடிக்கப்பட்ட இடத்தையும், வாடகை கட்டிடத்தில் இயங்கிவரும் பள்ளியிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு கழிப்பிட வசதி உள்ளதா எனவும், ஆசிரியர்கள் போதுமான அளவு உள்ளார்களா என்பதை கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது கீழ்வீதி ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி செல்வம், வட்டார கல்வி அலுவலர் அரசு, வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்