17 வயது மாணவியை திருமணம் செய்த வாலிபர் கைது
குழந்தைகள் திருமணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வாலிபரை போலீசார் கைதுசெய்தனர்.;
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகேயுள்ள பழைய திருச்சம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி மகன் மெய்யப்பன் (25), தான் 5 ஆண்டுகளாக காதலித்து வந்த 17 வயதான கல்லூரி மாணவியை கடந்த 6-ந் தேதி கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார். இதுதொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து மாணவியின் தந்தை கொடுத்த புகாரின்பேரில், மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார், குழந்தைகள் திருமணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மெய்யப்பனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.