விழுப்புரம்: ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு
பெண்ணிடம் 3 பவுன் நகை பறித்துச்சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
விழுப்புரம்,
புதுச்சேரி மாநிலம் பிள்ளைச்சாவடி திருக்குளம் தெருவை சேர்ந்தவர் முருகன் மனைவி பூரணி (வயது 45). இவர் நேற்று மாலை தனது ஸ்கூட்டரில் குயிலாப்பாளையத்தில் இருந்து பொம்மையார்பாளையம் நோக்கி சென்றுகொண்டிருந்தார்.
ஆரோவில் அருகே குயிலாப்பாளையத்தில் உள்ள ஒரு ரெஸ்டாரண்ட் அருகே சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் முககவசம் அணிந்தபடி வந்த ஒருவர் திடீரென, பூரணி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டார். பறிபோன நகையின் மதிப்பு ரூ.2 லட்சமாகும்.
இதுகுறித்து பூரணி, ஆரோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச்சென்ற நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.