பெண்ணிடம் நகை பறிப்பு
மணியகாரம்பாளையத்தில் பெண்ணிடம் 3 பவுன் நகை பறிக்கப்பட்டது.;
கணபதி
கோவை கணபதியை அடுத்துள்ள மணியகாரம்பாளையத்தை சேர்ந்தவர் சாவித்திரி (வயது 55). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சாவித்திரி நேற்று முன்தினம் இரவு மணியகாரம்பாளையம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த வாலிபர் திடீரென அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார்.
இதையடுத்து சாவித்திரி சத்தம்போட்டார். அக்கம் பக்கத்தினர் அங்கு வருவதற்குள் அந்த வாலிபர் ஏற்கனவே தயாராக காத்திருந்த வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்றுவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.