கபடி போட்டிகள்
இளையான்குடி அருகே உள்ள கீழநெட்டூர் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக கபடி போட்டிகள் நடைபெற்றது.;
இளையான்குடி
இளையான்குடி அருகே உள்ள கீழநெட்டூர் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக கபடி போட்டிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ராமாயி தலைமை தாங்கினார். தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கபடி போட்டிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன், ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், தலைமை கழக பேச்சாளர் அய்யாச்சாமி, அழகுபாண்டி, கண்ணன் தகவல் தொழில் நுட்ப அணி அழகேசன், கண்ணன் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.