கலவைபுத்தூர் ஏரி நிரம்பியது

தொடர் மழையால் கலவைபுத்தூர் ஏரி நிரம்பியது.;

Update:2023-10-08 00:30 IST

திமிரி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் பல்வேறு ஏரிகள் நிரம்பி வழிகின்றன.

அதன்படி கலவைபுத்தூர் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறுகிறது. இதன்மூலம் கலவை - கலவைபுத்தூர் சுற்றியுள்ள வேம்பி, பென்னகர், தோணிமேடு, பாலி, பின்னந்தாங்கல் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சுமார் 1500 ஏக்கர் விவசாய நிலம் பயன் அடையும்.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்