குமாரபாளையம் அரசு ஆண்கள் பள்ளியில்கார்கில் வெற்றி நினைவேந்தல்

Update: 2023-07-26 19:00 GMT

குமாரபாளையம்:

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படை சார்பில் கார்கில் போரின் 24-ம் ஆண்டு வெற்றி நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் அங்கப்பராஜ் தலைமை தாங்கினார். குமாரபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கார்கில் போரில் இறந்த 527 ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் நினைவு கூர்ந்தார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு தேசிய மாணவர் படை தேர்வில் தேர்ச்சி பெற்ற 50 மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இதில் ஆசிரியர் கவிராஜ், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் தேசிய மாணவர் படையினர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை அலுவலர் அந்தோணிசாமி செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்