தென்காசி நகராட்சி அலுவலகம் முன்பு கருணாநிதி உருவச் சிலை; கலெக்டரிடம் அனுமதி கோரி நகர்மன்ற தலைவர் கடிதம்

தென்காசி நகராட்சி அலுவலகம் முன்பு கருணாநிதி உருவச் சிலை அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என கலெக்டரிடம் நகர்மன்ற தலைவர் கடிதம் கொடுத்தார்.;

Update:2023-06-12 00:15 IST

தென்காசி நகராட்சி அலுவலகம் முன்பு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி் முழு உருவ வெண்கல சிலையை அமைக்க நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த சிலை நகர்மன்ற தலைவரும் தி.மு.க. நகரச் செயலாளருமான சாதிர் மற்றும் துணைத் தலைவர் கே.என்.எல். சுப்பையா ஆகியோரின் சொந்த செலவில் அமைக்கப்படுகிறது. இதற்கு அனுமதி கோரி இவர்கள் இருவரும் தென்காசி மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரனை நேரில் சந்தித்து கடிதம் கொடுத்தனர். அப்போது நகர்மன்ற கவுன்சிலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்