வாலிபருக்கு அடி-உதை

சிவகிரியில் வாலிபருக்கு அடி-உதை விழுந்தது. இதுதொடர்பாக சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-04-07 00:15 IST

சிவகிரி:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா தேவதானம் கோட்டை மாடசாமி கோவில் தெருவை சேர்ந்த தங்க மாரியப்பன் மகன் மகேந்திரன் (வயது 21).

இவர் தனது நண்பர்களுடன் தென்காசி மாவட்டம் சிவகிரியில் நடந்த தேரோட்டம், தெப்பத்திருவிழாவுக்காக வந்தார். அப்போது அவருடைய மோட்டார்சைக்கிள் பஞ்சர் ஆகிவிட்டது. அதை சரி செய்வதற்காக மேலரத வீதியில் உள்ள ஒரு பஞ்சர் கடைக்கு வந்தார்.

அப்போது அங்கு நின்ற கீழ மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த புலியூர் மகன் சதீஷ்குமார் (24), பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் சரவணன் (21), மற்றும் 17 வயது சிறுவர்கள் 2 பேர் சேர்ந்து மகேந்திரனை அடித்து-உதைத்தனர். அவரது மோட்டார்சைக்கி்ளையும் அடித்து நொறுக்கினர். அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து அவரை சிகிச்சைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி மகேந்திரன் சிவகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் சஜிவ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சதீஷ்குமார், சரவணன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர்.

பின்னர் சிவகிரி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி கே.எல். பிரியங்கா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து சரவணன், சதீஷ்குமார் ஆகிய 2 பேரையும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். 2 சிறுவர்களையும் வள்ளியூரில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி புளியங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அசோக் விசாரணை நடத்தி வருகிறார்.


Tags:    

மேலும் செய்திகள்