பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் தேரோட்டம்; திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்

பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர்.

Update: 2023-05-04 21:36 GMT

பவானி

பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர்.

சங்கமேஸ்வரர் கோவில்

பவானியில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆதிகேசவ பெருமாள் சாமிக்கு தனி சன்னதி உள்ளது. இந்த கோவிலின் சித்திரை தேர் திருவிழாவையொட்டி கடந்த 26-ந் தேதி சங்கமேஸ்வரர் கோவிலில் கொடியேற்றப்பட்டது.

பின்னர் 27-ந் தேதி ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கெடியேற்றப்பட்டது. நேற்று முன்தினம் ஆதிகேசவ பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

தேரோட்டம்

நேற்று காலை சங்கமேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதைத்தொடர்ந்து சங்கமேஸ்வரர் உடனமர் வேதநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார்.

இதையடுத்து தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்