கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

Update: 2023-09-06 22:15 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.

கிருஷ்ண ஜெயந்தி

நாடு முழுவதும் நேற்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதையொட்டி பொள்ளாச்சியில் அரசு, தனியார் பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இதேபோன்று டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில், கடை வீதி விஷ்ணு பஜனை கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

ஊர்வலம்

மேலும் விசுவ இந்து பரிசத் சார்பில் சத்திரம் வீதியில் ஊர்வலம் புறப்பட்டது. இதில் 250 குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து கலந்துகொண்டனர். இதேபோன்று ஆனைமலையிலும் கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் நடைபெற்றது. ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதபெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. அங்கு பால், தயிர், இளநீர், பன்னீர் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நடனம்

பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையம் மாகாளியம்மன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் கிருஷ்ணர் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பு வழிபாடுகளுடன் நடைபெற்றது. இதையொட்டி கோவில் முன் மண்டபத்தில் கோகுல கண்ணன் வழிபாடு நடந்தது. தொடர்ந்து குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வந்து நடனமாடினர்.

Tags:    

மேலும் செய்திகள்