திடீர் ஏரியாக மாறிய குன்றத்தூர் அரசு பள்ளி விளையாட்டு மைதானம்; உணவு தேடி வந்த பறவைகளால் பரபரப்பு

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் அரசு பள்ளி விளையாட்டு மைதானம் ஏரி போல் காட்சி அளிப்பதால் பறவைகள் திடீரென அங்கு முகாமிட ஆரம்பித்தது.

Update: 2023-03-20 07:13 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குன்றத்தூர், கொல்லசேரி நான்கு சாலை சந்திப்பில் உள்ள அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தில் மழை நீரானது அதிக அளவில் தேங்கியுள்ளது. தற்போது மழைநீர் நிறைந்து காணப்படுவதால் விளையாட்டு மைதானம் காண்பதற்கு ஒரு ஏரி போல் காட்சி அளிக்கிறது. இங்கு தேங்கியிருந்த மழைநீரை ஏரி என நினைத்து ஏராளமான பறவைகள் திடீரென அங்கு முகாமிட ஆரம்பித்தது.

தேங்கியிருந்த மழை நீரில் உணவு தேடி வந்த பறவைகளால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பள்ளி வளாகத்தை ஒட்டி ஏராளமான மரங்கள் இருந்ததால் ஏரி போன்ற சூழலுடன் காணப்பட்டது. விடுமுறை நாளில் பள்ளி விளையாட்டு மைதானத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். தற்போது விளையாட்டு மைதானத்தில் தேங்கியுள்ள மழை நீரில் பறவைகள் அதிகமாக படையெடுத்து இருப்பதை விளையாட வரும் இளைஞர்கள் புகைப்படம் எடுத்துவிட்டு செல்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்