வாலிபரை கத்தியால் குத்திய தொழிலாளி கைது

வாலிபரை கத்தியால் குத்திய தொழிலாளி கைது;

Update:2023-06-09 01:00 IST

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை அருகே புளியமரத்துபாளையத்தை சேர்ந்தவர்கள் அருண்குமார்(வயது 25), மணிமாறன்(40). கூலி தொழிலாளர்கள். இவர்கள் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள மதுரை வீரன் கோவில் திருவிழாவில் சமையலுக்கு பயன்படுத்த ஆட்டு இறைச்சியை வெட்டி கொண்டு இருந்தனர்.

அப்போது குடிபோதையில் இருந்த அவர்கள் 2 பேருக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மணிமாறன் திடீரென அருண்குமாரை கத்தியால் குத்தியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிமாறனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்