கள்ளக்குறிச்சியில் டிரோன்கள் பறக்க தடை

முதல்-அமைச்சர் வருகையையொட்டி, கள்ளக்குறிச்சியில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-12-25 06:50 IST

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வருகை தர உள்ளார். புதிய ஆட்சியர் அலுவலகம் திறப்பு உட்பட, அரசு நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் கலந்துகொள்ள உள்ளார்.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வருகையை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்றும், நாளையும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்