சிங்கம்புணரி
சிங்கம்புணரி அருகே வேங்கைபட்டியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவருடைய மகன் அருண்குமார்(வயது 25).பா.ஜனதா கிளை செயலாளர். இவர் முட்டாகட்டியில் இருந்து பிரான்மலைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியதில் அருண்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து எஸ்.வி.மங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து லாரி ஓட்டி வந்த குன்னானம்பட்டியைச் சேர்ந்த ஹரி ராமனை விசாரணைக்கு அழைத்து சென்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, முட்டாகட்டியிலிருந்து பிரான்மலை செல்லும் சாலை குறுகிய சாலையாக உள்ளதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எனவே இந்த சாலைைய விரிவுப்படுத்த வேண்டும் என்றனர்.