ஆசிரியர்களுக்கு கற்றல் விளைவு, வாழ்வியல் திறன் பயிற்சி

ஆசிரியர்களுக்கு கற்றல் விளைவு, வாழ்வியல் திறன் பயிற்சி;

Update:2023-08-25 00:15 IST

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே குருக்கத்தி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், கீழ்வேளூர் வட்டார அளவில் உள்ள 9 மற்றும் 10-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு கற்றல் விளைவு மற்றும் வாழ்வியல் திறன் பயிற்சி நடைபெற்றது. பயிற்சியினை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் காமராஜன் தொடங்கி வைத்தார். மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். இதில் 9,10-ம் வகுப்புகளில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான குறுவள பயிற்சி மற்றும் தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் பாடங்களுக்கான கற்றல் விளைவு மற்றும் வாழ்வியல் திறன் பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் கருத்தாளர்களாக செயல்பட்டு பயிற்சி அளித்தனர். இப்பயிற்சியில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்