லாட்டரி சீட்டு விற்றவர் கைது

கலசபாக்கம் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-04-29 22:09 IST

கலசபாக்கம்

கலசபாக்கம் தாலுகா கடலாடி கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகன் சோமு என்ற சோமசுந்தரம்.

இவர் இன்று கடலாடி மெயின் ரோட்டில் சைக்கிள் ஷாப்பிடம் நின்று கொண்டு லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டு இருந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கடலாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி மற்றும் போலீசார் விரைந்து சென்று சோமுவை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளும், ரூ.80 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.

ேமலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்