ரெயில் தண்டவாளத்தில் ஆண் பிணம்

ராசிபுரம் அருகே ரெயில் தண்டவாளத்தில் ஆண் பிணம்; யார்? அவர் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2023-03-03 00:15 IST

ராசிபுரம்

ராசிபுரம் டவுன் சேலம் ரோட்டில் உள்ள ரெயில்வே மேம்பாலம் அடியில் சேலம் கரூர் அகல ரெயில் பாதை செல்கிறது. இந்த ரெயில் தண்டவாளத்தில் நேற்று மாலையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கை கால்கள் உடைந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. மேலும் அவர் நேற்று மாலையில் அந்த வழியாக வந்த ரெயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ரெயிலில் தவறி விழுந்து இறந்தாரா? என தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு ராசிபுரம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் சேலம் ரெயில்வே போலீசாருக்கு இதுகுறித்து தகவல் தொிவித்தனர். அதன்பேரில் சேலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்