டிராக்டரில் மண் கடத்தியவர் கைது

டிராக்டரில் மண் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-07-05 01:28 IST

களக்காடு:

களக்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் தலைமையில் போலீசார் கள்ளிகுளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பர்குளம் அருகே சத்திரம் கள்ளிக்குளம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த பரமசிவன் (வயது 43) உள்பட 2 பேர் சேர்ந்து 2 டிராக்டர்களில் குளத்து மண்ணை அனுமதி இன்றி கடத்தி வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் பரமசிவனை கைது செய்தனர். தப்பிச் சென்ற மற்றொருவரை தேடி வருகின்றனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்