மஞ்சளாறு அணை நீர்மட்டம் 49 அடியாக உயர்வு

மஞ்சளாறு அணை நீர்மட்டம் 49 அடியாக உயர்ந்தது.

Update: 2023-09-04 18:45 GMT

தேவதானப்பட்டியில் மஞ்சளாறு அணை உள்ளது. அணையின் மொத்த உயரம் 57 அடியாகும். இந்த அணை மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 5 ஆயிரத்து 268 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து அணைக்கு நீர்வரத்து ஏற்படும். நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் கடந்த மாதம் 30-ந்தேதி வரை அணை நீர்வரத்து இன்றி காணப்பட்டது. அப்போது நீர்மட்டம் 47.95 அடியாக இருந்தது.

இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதன்படி, நேற்று அணையின் நீர்மட்டம் 49.60 அடியாக உயர்ந்தது. வெளியேற்றம் ஏதும் இல்லை. நீர்வரத்து வினாடிக்கு 80 கன அடியாக உள்ளது. நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந்தேதி வழக்கம்போல் முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்