தான்தோன்றீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு

தான்தோன்றீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு பெற்றது.;

Update:2023-07-21 00:15 IST


தியாகதுருகம், 

தியாகதுருகம் அருகே வடதொரசலூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரிபுரசுந்தரி உடனுறை தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோவில் வளாகத்தில் சிவனடியார்களின் வேள்வி வழிபாடு நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்