மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
பொள்ளாச்சியில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியியை சேர்ந்த பெண்கள் உள்பட 87 பேரை போலீசார் கைது செய்தனர்.;
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியியை சேர்ந்த பெண்கள் உள்பட 87 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் பண மதிப்புழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, நீட் தேர்வு, மணிப்பூர் கலவரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காதது ஆகியவற்றை கண்டித்து பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு செயற்குழு உறுப்பினர் பழனிசாமி தலைமை தாங்கினார். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில் தாலுகா செயலாளர் அன்பரசன், கமிட்டி உறுப்பினர்கள் மகாலிங்கம், ரேவதி, விஜயா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
சாலை மறியல்
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஊர்வலமாக பஸ் நிலையம் ரவுண்டானா பகுதிக்கு சென்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து சப்-கலெக்டர் அலுவலக சாலையில் தரையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்பட 87 பேரை கைது செய்து வேனில் ஏற்றினர். பின்னர் கைதானவர்களை போலீசார் ஒரு தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். 'மதியம் 2 மணிக்கு பிறகு போலீசார் அவர்களை விடுவித்தனர்.