மாசி கரிய பண்ட அய்யன் கோவில் திருவிழா
மாசி கரிய பண்ட அய்யன் கோவில் திருவிழா நடந்தது.;
கூடலூர்,
மசினகுடி அருகே ஆனைக்கட்டியில் மாசி கரிய பண்ட அய்யன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 26-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து தினமும் பல்வேறு விசேஷ பூஜைகள் நடைபெற்று வந்தது. பின்னர் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சிக்கு மரங்கள் கொண்டு வரப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பின்னர் சிறியூர் மாரியம்மனை அழைத்து வருதல், கொங்காளி அய்யனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவு 9 மணிக்கு புலி வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.