விபத்தில் கொத்தனார் பலி

பணகுடியில் நடந்த விபத்தில் கொத்தனார் பலியானார்.;

Update:2023-03-09 00:23 IST

பணகுடி:

பணகுடி அண்ணாநகர் கோவில்விளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் (வயது 36), கொத்தனார். இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் பணகுடி சாத்தான்குளத்தை சேர்ந்த முருகன் மகன் கார்த்திக் (21) என்பவரை ஏற்றிக் கொண்டு பணகுடி நான்குவழிச்சாலையில் சென்று கொண்டு இருந்தார்.

நான்குவழிச்சாலை தெற்கு மேம்பாலத்தில் சென்று கொண்டு இருந்த போது, மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் ராஜலிங்கம் சம்பவ இடத்திலேயே பலியானார். கார்த்திக் படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பணகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, படுகாயம் அடைந்த கார்த்திக்கை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்