மின்சாரம் தாக்கி மெக்கானிக் பலி

சோளிங்கர் அருகே மின்சாரம் தாக்கி மெக்கானிக் பலியானார்.;

Update:2023-05-18 22:35 IST

சோளிங்கரை அடுத்த ஐபேடு கிராமத்தில் பாக்கு மாட்டை தயாரிக்கும் கம்பெனி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மிஷின் ரிப்பேர் ஆகியதாக கூறப்படுகிறது. அதனால் நாமக்கல் மாவட்டம் நத்தம் பள்ளி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் குமார் (வயது 40) என்பவர் மிஷின் ரிப்பேரை சரிசெய்வதற்காக வரவழைக்கப்பட்டார்.

அவர் நேற்று காலை மிஷினை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது போது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். உடனே கம்பெனி உரிமையாளர் ரமேஷ் அவரை சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். டாக்டர்கள் அவரை பரிசோதித்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து சோளிங்கர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்