எஸ்.வாழவந்தி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

Update:2023-03-24 00:15 IST

மோகனூர்:

மோகனூர் ஒன்றியம் எஸ்.வாழவந்தி ஊராட்சிக்குட்பட்ட சின்னகரசபாளையத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மணப்பள்ளி ஊராட்சியில் இருந்து எஸ்.வாழவந்தி ஏரி வழியாக பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு புதிய நீரேற்று பாசனம் திட்டத்தின் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் எஸ்.வாழவந்தி ஏரியில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து ஏரியில் தண்ணீர் நிரப்பவும், சீமை கருவேல மரங்களை அகற்றவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல் மணப்பள்ளி ஊராட்சியில் தலைவர் இந்துமதி தலைமையிலும், செங்கப்பள்ளி ஊராட்சியில் தலைவர் நந்தகுமார் தலைமையிலும், காளிபாளையம் ஊராட்சியில் தலைவர் பொன்னுசாமி தலைமையிலும், கே.புதுப்பாளையம் ஊராட்சியில் தலைவர் சின்னம்மாள் தலைமையிலும், ராசிபாளையம் ஊராட்சியில் தலைவர் சுப்பிரமணி தலைமையிலும், லத்துவாடி ஊராட்சியில் தலைவர் பரமேஸ்வரி தலைமையிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. 

மேலும் செய்திகள்