பரமத்திவேலூர்:
கபிலக்குறிச்சி ஊராட்சி சார்பில் கபிலர்மலையில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் வடிவேல் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் குணவதி முன்னிலை வகித்தார். செயலாளர் பிரபாகரன் வரவேற்றார். கூட்டத்தில் உலக தண்ணீர் தின கருப்பொருள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துதல், மழைநீரை சேகரித்தல், உடைந்த குழாய்களை சீரமைத்து தண்ணீர் வீணாகாமல் பாதுகாத்தல், தண்ணீர் மாசுபாட்டை தடுத்தல், மரம் வளர்த்தலை ஊக்குவித்தல் என்பன உள்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதேபோல் மாணிக்கநத்தம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் வேலுசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வசந்தகுமாரி சரவணன் முன்னிலை வகித்தார். செயலாளர் உதயகுமார் வரவேற்றார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.