முக்கூடல்:
முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள முத்துமாலையம்மன் கோவில் திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா வருகிற 12-ந் தேதி வரை நடக்கிறது. விழாவின் 8-ம் திருநாளான நேற்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கோவிலில் இருந்து பால்குடம் சுமந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தனர். அதனை தொடர்ந்து மதிய பூஜையும், அன்னதானமும் நடைபெற்றது. இரவில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் அம்பாள் சப்பர பவனி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை இந்து நாடார் சமுதாய தலைவர் பொன்னரசு மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.