மதுரை விமான நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாடிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தனது பிறந்தநாளை மதுரை விமான நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடினார்.;

Update:2023-03-07 07:37 IST

மதுரை,

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தனது 57 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அவர் தனது பிறந்தநாளை இன்று மதுரை விமான நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடினார். இதில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின், மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு அவர்கள் கேக் ஊட்டி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்